உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு பா.ஜனதா அழுத்தம் கொடுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு பா.ஜனதா அழுத்தம் கொடுக்கும் என்று தக்கலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-04-24 23:00 GMT
நாகர்கோவில்,

தக்கலை அருகே முத்தலகுறிச்சி கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் கிராம நிர்வாகங்களுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்காமல் உள்ளது. இந்த நிதியை பெறுவதற்காக உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு பா.ஜனதா அழுத்தம் கொடுக்கும்.

அ.தி.மு.க.வுடன் இணைத்து...

தமிழர் அல்லாதவர் தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஆகலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழர்கள் தான் ஆளவேண்டும் என கூறுபவர்கள் சாதி, மத, இன, மொழி ரீதியாக மக்களை பிளவு படுத்துகிறார்கள்.

தற்போது பா.ஜனதாவுடன் அ.தி.மு.க.வை இணைத்து பேசுவது போல் ஏற்கனவே தி.மு.க.வுடன் இணைத்து பேசியதும் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்