மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து தகராறு: காரில் வந்த பெண்களை தாக்கிய 2 பேர் கைது
மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து தகராறு செய்ததுடன், காரில் வந்த பெண்களை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வீரமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாபதி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டுக்கு சென்னையைச் சேர்ந்த அவரது உறவினர்கள் சிலர் காரில் வந்தனர்.
அப்போது வீரமங்களம் காலனி அருகே அதே பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ்(வயது 30), ஜோஷிமா(25) ஆகியோர் அந்த காரை வழி மறித்தனர். பின்னர் காரின் முன்பு குடிபோதையில் கையில் இருந்த காலி மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து தகராறு செய்தனர்.
பெண்கள் மீது தாக்குதல்
அத்துடன் காரில் இருந்த ராஜேஸ்வரி, ரேவதி, கோமதி, தனலட்சுமி, ஷர்மிலி, பத்மினி, சுரேஷ்குமார் மற்றும் கார் டிரைவர் அருள் ஆகியோரை கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி, தாக்கி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து கார் டிரைவர் அருள் அளித்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருள்தாஸ், ஜோஷிமா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.