திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வாலிபர் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2018-04-24 22:15 GMT
திருவள்ளூர், 

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் ஜெகன்(வயது 23). இவர், நெற்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெகன், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் அவர், திருவள்ளூரை அடுத்த சித்துக்காடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக மிதந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அடித்துக்கொலையா?

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கூவம் ஆற்றில் மிதந்த ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகன் கூவம் ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக்கொலை செய்து விட்டு அவரது உடலை கூவம் ஆற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்