இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 1032 பணியிடங்கள்

இயற்கை எரிவாயு நிறுவனத்தில் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் 1032 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Update: 2018-04-24 05:32 GMT
தகுதியான என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களை கேட்-2018 தேர்வின் அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 1032 பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மெக்கானிக்கல் (டிரிலிங்) பிரிவில் 129 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 127 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 106 இடங்களும், புரொடக்சன் (மெக்கானிக்கல்) பிரிவில் 76 இடங்களும், புரொடக்சன் கெமிக்கல் பிரிவில் 101 இடங்களும், பெட்ரோலியம் புரொடக்சன் பிரிவில் 46 இடங்களும், கெமிஸ்ட் பிரிவில் 93 இடங்களும், ஜியாலஜிஸ்ட் பிரிவில் 73 இடங்களும் உள்ளன. இவை தவிர புரோகிராமிங் ஆபீசர், டிரான்ஸ்போர்ட் ஆபீசர், ரிசர்வேயர், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இதர பணிகளுக்கும் கணிசமான இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., முதுநிலை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இவர்கள் 2018 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

கேட் 2018 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ‘கேட்’ மதிப்பெண்கள் 60 சதவீதமாக கணக்கில் எடுக்கப்படும். நேர்காணலுக்கு 15 சதவீத மதிப்பெண் ஒதுக்கப்படுகிறது. மீதி 25 சதவீத மதிப்பெண்கள் கல்வித்தகுதி மற்றும் சிறப்புத் தகுதிகளுக்கு கணக்கிடப்படும். இவற்றின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் பணி நியமனம் பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கேட் தேர்வு விண்ணப்ப பதிவு எண் அவசியம். தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 3-5-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

என்ஜினீயர்ஸ் இந்தியா

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திலும் கேட் தேர்வு அடிப்படையில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி.( பொறியியல்) படித்து கேட் 2018 தேர்வை எழுதி இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள் 25 வயது முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக 2-5-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.engineersindia.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்