கலவை அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி சாவு
கலவை அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை,
கலவை அருகே உள்ள மேச்சேரி கிராமம், புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 32), பிராமணர் தெருவை சேர்ந்தவர் அமரேசன் (36). 2 பேரும் கூலி தொழிலாளிகள்.
சுந்தரமூர்த்தி, அமரேசன் இருவரும் கடந்த 21-ந் தேதி இரவு மேச்சேரி ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் 2 பேரையும் காணவில்லை.
இதற்கிடையில் இருவரது உடைகளும் மேச்சேரி ஏரிக்கரையில் இருந்ததால் இருவரும் ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் இரவு கலவை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கலவை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மேச்சேரி ஏரிக்கு விரைந்து சென்று இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் காலையில் தேடி கொள்ளலாம் என்று முடிவு செய்து திரும்பினர். இதற்கிடையில் நேற்று காலை ஏரியில் சுந்தரமூர்த்தி, அமரேசன் ஆகியோரின் உடல்கள் மிதந்தன.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கலவை தீயணைப்பு படையினர் சுந்தரமூர்த்தி, அமரேசன் ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் கலவை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சுந்தரமூர்த்தி, அமரேசன் ஆகியோரது பிணத்தை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் மூழ்கி இறந்த சுந்தரமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் 2 மகள்கள், ஒரு மகனும், அமரேசனுக்கு கோகிலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
ஏரியில் மீன் பிடிக்க சென்ற சுந்தரமூர்த்திக்கு நீச்சல் தெரியாது எனவும், எனவே நீரில் மூழ்கிய சுந்தரமூர்த்தியை, அமரேசன் காப்பாற்ற முயன்று அப்போது இருவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.