ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அடுத்த கட்ட பிரசாரம் 26-ந் தேதி தொடங்கப்படும் வைகோ பேச்சு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அடுத்தகட்ட பிரசாரம் 26-ந் தேதி தொடங்கப்படும் என தஞ்சையில் வைகோ கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு வீடியோ, போட்டோ கிராபர்ஸ் அசோசியேசன் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதை கைவிட வற்புறுத்தியும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பிரேம்லால் தலைமை தாங்கினார்.
மாநில நிர்வாகிகள் சேகர், சிவக்குமார், நித்தியானந்தம், பாபு, மாவட்ட தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோபு வரவேற்றார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் பிரசாரம் செய்தபோது என்னை கொலை செய்யும் முயற்சியாக கற்கள் வீசப்பட்டன. பிரசாரத்தை நிறுத்துவதற்காக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணத்தை வாங்கி கொண்டு என்னை தாக்குகின்றனர்.
எனது வாழ்நாள் முழுவதும் நியாயத்திற்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். நான் வாழ்ந்து முடித்து விட்டேன். நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அடுத்த கட்ட பிரசாரம் 26-ந் தேதி தொடங்கப்படும். 28-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும்.
போலீசார் அனுமதி கொடுக்காமல் தடுத்தால் நாங்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம். மாநிலம் முழுவதும் அமைதியாக சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். கோர்ட்டிற்கு சென்று பிரசாரம் செல்ல அனுமதியை வாங்குவோம். போர்க்களத்தில் யுத்தம் செய்வது என் ரத்தத்தில் ஊறியது. போர்க்களத்தில் இருந்து நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஒருபோதும் அமைக்காது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் நோக்கம் அல்ல. காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி, விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை வாங்கி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் மத்திய அரசின் நோக்கமாகும்.
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை விவசாயிகள் சங்கம் சார்பில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். நெடுவாசல், கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டத்தை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதற்காக நாங்கள் அழிந்து விட வேண்டுமா?.
காவிரி பிரச்சினையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆயிரம் அடி குழி தோண்டி நீதியை புதைத்து விட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள் கிளர்ந்து எழ வேண்டும். வன்முறையில் ஈடுபடாமல் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். யாரும் தீக்குளிக்க வேண்டாம். தீக்குளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் போராட்ட களத்திற்கு வந்து தீவிரமாக போராட வேண்டும். இந்திய ஒருமைப்பாடு காக்க வேண்டும் என்றால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
கட்டப்பொம்மனை பற்றி பேசும்போதெல்லாம் எட்டப்பன் ஞாபகம் வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணைபோனால் நிரந்தர பழிக்கு ஆளாகுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.