திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்ச்சி
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விளமல்,
சங்கீத மும்மூர்த்திகள் என போற்றப்படும் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய 3 பேரும் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் வாழ்ந்த இல்லங்கள் திருவாரூரில் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவாரூரில் அவதரித்த சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழா திருவாரூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விழா திருவாரூரில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்ச்சி நேற்று தியாகராஜர் கோவிலில் நடை பெற்றது.
தியாகராஜர் கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடகிகள் மகதி, சவுமியா, பாடகர் பாலமுரளி கிருஷ்ணா உள்பட ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடினார்கள்.
நிகழ்ச்சியில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதியை சேர்ந்த மடிப்பாக்கம் சுவாமிநாதன், பொதுச்செயலாளர் திருவாரூர் பக்தவச்சலம், துணைத்தலைவர்கள் கனகராஜன், கார்த்திகேயன், பொருளாளர் ஜெயபால், இணை செயலாளர்கள் கோவிந்தராஜன், மதி, திருவேங்கடம், டாக்டர் செந்தில், மக்கள் தொடர்பு அலுவலர் வைத்தியநாதன், பன்னீர்செல்வம், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.