கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், ரவி, சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க பொது செயலாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
வரையறுக்கப்பட்ட ஊதியம்
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.