காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் நாகை மாவட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சித்தார்தன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.