பாலப்பணியை விரைந்து முடிக்க கோரி திருமாந்துரை-மதினா நகர் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
பாலப்பணியை விரைந்து முடிக்க கோரி திருமாந்துரை-மதினா நகர் பகுதி பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 195 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விரைந்து முடிக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துரை, மதினா நகர் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு உள்ளவர்கள் வேலைக்கு செல்வதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கும் ஒகளூர் வாய்க்காலை தாண்டி தான் செல்ல வேண்டும். மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் சுற்றி தனியாருக்கு சொந்தமான பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் மதினா நகரில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாலப்பணி மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. எனவே பாலப்பணியை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
காசோலை
தொடர்ந்து கூட்டத்தில் வயலுக்கு பூச்சி மருந்து அடிக்கும் போது மூச்சுச்திணறல் ஏற்பட்டு இறந்து போன ஒதியம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், சித்தளி கிராமத்தை சேர்ந்த ராஜா ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.