பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி வாழை இலையுடன் சென்று கலெக்டரிடம் மனு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி காந்திய மக்கள் இயக்கத்தினர் வாழை இலையுடன் சென்று கலெக்டர் மனுகொடுத்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், பயிர் காப்பீட்டு தொகை வழங்க கேட்டல் என 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தாட்கோ மூலம் தொழில் புரிவதற்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் நிதியை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சிவகங்கையை அடுத்த கீழசேத்தூர் கிராமமக்கள், தங்களது கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருவதாக கூறி மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களை பார்த்த கலெக்டர் லதா, அவர்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராமமக்கள், கீழசேத்தூர் கிராமத்தில் பல மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பிற்கு உள்ளாகி வருகிறோம். எனவே குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
முன்னதாக காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தலைவர் அருளானந்தம் தலைமையில் அதன் அமைப்பினர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாழை இலைகளுடன் சென்று கலெக்டரிடம் மனுகொடுத்தனர். மனுவில், மாவட்டத்தில் உள்ள ஓட்டல், கடைகள் மற்றும் திருமண மண்டபங்களில் பெரும்பாலும் பிளாஸ்டிக் இலைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஆய்வுசெய்து பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்ய வேண்டும். மேலும் பிளாஸ்டிக் இலைகளுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.