குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பேராவூரணி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு ஊரணிக்கரை குடியிருப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மாவடுகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த கவிதா, வீரலட்சுமி, சாந்தி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் கொன்றைக்காடு ஆற்றுப் பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் மறியல் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றிய ஆணையர் நேரில் வந்து, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என பெண்கள் கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், ஒன்றிய துணை ஆணையர் மகேஷ், வருவாய் ஆய்வாளர் தர்ஷணா ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 2 நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை டேங்கர் லாரி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.