உசிலம்பட்டியில் அடுத்தடுத்து ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் தூக்குப் போட்டு தற்கொலை

உசிலம்பட்டியில் ஒரே நாளில் அடுத்தடுத்து பெண் உள்பட 2 பேர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-04-23 21:45 GMT
உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ளது வடகாட்டுப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கார்மேகம் மகன் ரமேஷ் (வயது 35). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார். மேலும் நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் இருந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் இவருடைய மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் ரமேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரமேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி பி.எம்.டி. நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் மனைவி நித்யா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையை அடுக்கடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனையில் இருந்த நித்யா நேற்று வீட்டில் உள்ள படுக்கை அறையில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட 2 பேரின் உடலையும் போலீசார் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும் செய்திகள்