காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் மனித சங்கிலி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கரூரில் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடந்தது.
கோவை சாலையில் இருந்து ஜவகர் பஜார் வரை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், எம்.ஜி.ஆர். கழகம் உள்பட தோழமை கட்சி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கைகோர்த்து நின்றனர்.
மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலர் கருப்பு சட்டையும், கருப்பு பட்டையும் அணிந்திருந்தனர். பெண்கள் பலர் கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர். ஜவகர் பஜாரில் காமராஜர் சிலை அருகே நின்று கோரிக்கை தொடர்பாக கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சின்னசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், நகர தலைவர் ஸ்டீபன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.