புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.17¾ கோடி டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கான ரூ.17¾ கோடி டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
புதுக்கோட்டை ராணிராமதேவநகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 வகுப்பறைகள், ஒரு அறிவியல் ஆய்வகம், ஒரு கழிப்பறை உள்ளிட்டவற்றை கட்டும் பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி டெண்டர் விடப்பட்டது. ஆனால் இந்த டெண்டரை திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர் மார்ச் மாதம் 20-ந்தேதி மேற்கண்டவை உள்ளிட்ட 7 வகையான பணிகளை ஒன்றாக சேர்த்து புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதன் மொத்த மதிப்பு ரூ.17 கோடியே 81 லட்சம் ஆகும்.
மேலும் இந்த டெண்டரில் பங்கேற்க ஒரு சில முன் தகுதிகள் வைக்கப்பட்டன. இதனால் டெண்டரில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டர் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 120 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். 7 பணிகளுக்கும் சேர்த்து ஒரே டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது அனைத்து ஒப்பந்ததாரர்களையும் பாதிக்கும். மேலும் இந்த டெண்டர் நடவடிக்கை ஊழலுக்கும் வழிவகுக்கும்.
பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாது. எனவே திருச்சி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சார்பில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி வெளியிடப்பட்ட ரூ.17 கோடியே 81 லட்சம் மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றி முறையாக டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, “மேற்கண்ட பணிகள் அனைத்துக்கும் ஒரே டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த தொகையான ரூ.17 கோடியே 81 லட்சத்தில் பாதி தொகைக்கான பணியை ஒரே ஆண்டில் முடித்திருந்த ஒப்பந்ததாரர்கள் மட்டுமே இந்த டெண்டரில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள். இது சட்டவிரோதம்“ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மேற்கண்ட டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு குறித்து திருச்சி பொதுப்பணித்துறை பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும், இந்த வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.