சங்கராபுரம் அருகே உருட்டுகட்டையால் அடித்து தொழிலாளி கொலை, வாலிபர் கைது
சங்கராபுரம் அருகே உருட்டு கட்டையால் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
சங்கராபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம் வேலாந்தல் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் காசிவேல் (வயது 50). செருப்பு, குடை ஆகியவற்றை தைத்து கொடுக்கும் கூலி தொழில் செய்து வந்தார். இதற்காக அவர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். பகல் முழுவதும் அந்த கிராம பகுதியில் சுற்றி வந்து செருப்பு, குடை தைக்கும் தொழிலில் ஈடுபட்டார்.
பின்னர் இரவில் அந்த கிராமத்தில் தங்க முடிவு செய்த அவர், அங்குள்ள ராஜவீதியில் உள்ள ஏதாவது ஒரு வீட்டுக்கு வெளியே காலி இடம் கிடந்தால், அங்கு தூங்கலாம் என்று காலி இடத்தை காசிவேல் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் பாட்டு பாடிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அதேபகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அய்யாசாமி (வயது 35) என்பவர் என்னை பார்த்து கேலியாக பாட்டு பாடுகிறாயா என்று அவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யாசாமி அங்கு கிடந்த உருட்டு கட்டையால் காசிவேலின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்து, கீழே விழுந்த காசிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றிய தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து காசிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் (கூடுதல் பொறுப்பு) திவிகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அய்யாசாமியை கைது செய்தனர்.
இறந்த காசிவேலுக்கு முனியம்மாள் (வயது 45) என்கிற மனைவியும், ராஜா, ராஜேந்திரன், குமார் ஆகிய 3 மகன்களும், மலர், ராஜேஸ்வரி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.