முதல்மந்திரியுடன், ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு
நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரியுடன், ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசினார்.
மும்பை,
கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 கமாண்டர்கள் உள்பட 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் குறிப்பிடத்தகுந்த வெற்றி என கூறப்படுகிறது.
இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் இது தொடர்பாக முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போலீசாரின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கை குறித்து முதல்மந்திரி அவருக்கு விரிவாக கூறினார்.
இதையடுத்து போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்த ராஜ்நாத் சிங், கட்சிரோலி மாவட்டத்தில் இடதுசாரி பயங்கரவாதம் செயல்படும் விதம் குறித்தும், மாவட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் முதல்மந்திரியிடம் கேட்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.