மாநகராட்சி பரிசோதனை மையங்களுக்கு 600 ஊழியர்கள் தேர்வு

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மாநகராட்சி பரிசோதனை மையங்களுக்கு 600 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2018-04-22 23:45 GMT
மும்பை,

மும்பை மாநகராட்சி சார்பில் கே.இ.எம்., நாயர், சயான், கூப்பர் தவிர சிறிய அளவிலும் பல்வேறு ஆஸ்பத்திரிகள் பொது மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகின்றன. ஆனால் இந்த மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் உள்ள ரத்த பரிசோதனை மையங்கள், உடல் பரிசோதனை மையங்கள், ஸ்கேன் மையங்கள் போன்றவற்றில் குறைந்த அளவில் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். சில இடங்களில் ஊழியர்களே இல்லாமலும் உள்ளது. இதனால் நோயாளிகள் குறித்த நேரத்தில் தங்கள் பரிசோதனை முடிவுகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, “ எங்கள் ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் போன்ற எந்திரங்கள் இருந்தாலும் ஊழியர் இல்லாத காரணத்தால் நோயாளிகளை பரிசோதனைக்காக நாயர், கே.இ.எம். போன்ற ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல சிபாரிசு செய்து வருகிறோம் ” என்றார்.

இந்தநிலையில் பரிசோதனை மையங்களில் 600 பேரை பணியில் அமர்த்த மாநகராட்சி திட்டமிட் டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகராட்சிக்கு சொந் தமான சிறிய ஆஸ்பத்திரிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் பணியாற்ற 600 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளோம். இதற்காக ஆண்டுக்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்