வள்ளிமலையில் கொழுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ அணைந்தது
வள்ளிமலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தானாக அணைந்ததால் பக்தர்கள், அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள புகழ் பெற்ற சரவண பொய்கை குளத்தில் பலர் நீராடவும், தீர்த்தத்தை தலையில் தெளித்தும் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மலைமேல் உள்ள காடுகளில் திடீரென தீப்பிடித்தது. அங்குள்ள மரங்கள், தாவரங்களில் பிடித்த தீ பல அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக மலைக்கோவிலைச்சுற்றி இருந்த பல மரங்கள், செடி,கொடிகள், தீயில் கருகின.
மலை உச்சியில் பிடித்த தீ கீழ் பகுதியை நோக்கி பரவிக்கொண்டிருந்தது. இதனையடுத்து சிப்காட் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மேல்பாடி போலீசார் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மலை அடிவாரத்தில் உள்ள சன்னதிகளின் அருகே தயாராக இருந்தனர்.
அறநிலையத்துறையினரும் அங்கேயே பதற்றத்துடன் முகாமிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின் தீயின் வேகம் தணிந்து மெல்ல மெல்ல அணைந்தது. தீ பரவியிருந்தால் கோவில் கட்டிடத்துக்கும் அருகில் உள்ள இடங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக தீ தானாக அணைந்ததால் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.
தீ முற்றிலுமாக அணைந்ததை உறுதி செய்தபின்னர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.