திட்டங்களை கண்காணிப்பது தடை ஆகாது: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு கிரண்பெடி பதிலடி
அரசின் திட்டங்களை கண்காணிப்பது தடை ஆகாது என்று நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண் பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். அதன்பின் சற்று அமைதியான சூழல் நிலவி வந்தது.
இந்தநிலையில் தற்போது மீண்டும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடி மீது குற்றச்சாட்டுகளை கூறினார். இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:- கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுவதை கவனமாக ஆய்வு செய்வது கவர்னரின் பணி. அரசின் திட்டங்களை கண்காணித்து செயல்படுத்துவது தடை ஆகாது. பொதுமக்களின் பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. இதில் எந்தவித கசிவும் இடம் பெற்றுவிடக்கூடாது.
மக்களுக்கான திட்டங்கள் நல்ல துறையில் செயல்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதை நாங்கள் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.