தஞ்சையில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை 4 பேர் கைது
தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை வடக்குவாசல் ரோகிணி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் கம்பி மண்டையன் என்ற பாஸ்கர்(வயது36). பிரபல ரவுடி. இவர் மீது தஞ்சை மேற்கு, மருத்துவக்கல்லூரி, கிழக்கு மற்றும் திருமானூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு சந்தையில் இறைச்சி விற்பனைக்காக மாட்டை வெட்டி கொடுக்கும் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பாஸ்கர் தனது வீட்டில் இருந்து மாட்டு சந்தைக்கு நடந்து சென்றார். அப்போது மாட்டு சந்தை அருகே 4 பேர் கும்பல் அவரை வழி மறித்து வாள்களால் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் பாஸ்கர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்.
பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்தநிலையில் பாஸ்கர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பாஸ்கர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையை செய்தது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? பாஸ்கர் மீது 2 கொலை வழக்கு இருப்பதால் பழிக்குப்பழியாக அவர் கொல்லப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணி அளவில் தஞ்சை மேலஅலங்கத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(24), வடக்குவாசலை சேர்ந்த ராகுல்டிராவிட்(20), பொந்திரிபாளையத்தை சேர்ந்த சூர்யா(22), வடக்குவீதியை சேர்ந்த வினோத்(22) ஆகிய 4 பேரும் ரோகிணிகாலனி பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அங்கு வந்த பாஸ்கர், அந்த 4 பேரையும் பார்த்து எதற்காக இந்த பகுதியில் நிற்கிறீர்கள். எல்லோரும் இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள் நாங்கள் இங்கே நின்றால் உங்களுக்கு என்ன? என்று கைகளை நீட்டி பேசினர். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் திடீரென 4 பேரையும் அடித்ததுடன் தான் வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து ராகுல்டிராவிட்டின் கையில் கிழித்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இருப்பினும் அவர்கள் பாஸ்கரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி 4 பேரும் மாட்டு சந்தை பகுதியில் பதுங்கி இருந்தனர். நேற்றுஅதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த பாஸ்கரை வாள்களினால் 4 பேரும் சரமாரியாக தலைப்பகுதியில் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய 4 பேரையும் கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், போலீஸ்காரர்கள் மோகன்தாஸ், மார்ட்டின், சிவபாலசேகர், ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை பாலாஜிநகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் 4 பேர் சட்டையில் ரத்த கரையுடன் நடந்து சென்று கொண்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று கணேசமூர்த்தி, ராகுல்டிராவிட், சூர்யா, வினோத் ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.