காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் பால்பாண்டியன், மாநில பொருளாளர் சாகுல்அமீது, வக்கீல் மார்க்ஸ், திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரி நீரை நம்பி 7 கோடி மக்கள் உள்ளனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து போராட்டங்கள் நடத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.