காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சூர்யா நற்பணி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் நகர தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
ராசிபுரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் நகர தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘ஸ்கோரைவிட சோறு முக்கியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு’ போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு சூர்யா நற்பணி இயக்க மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ராசிபுரம் நகர தலைவர் ஏ.பி.ஏ.மோகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞர் அணி தலைவர் பிரபு நன்றி கூறினார்.