குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும் அமைச்சர் தங்கமணி உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும் என அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மை செயலாளருமான பாலசந்திரன் ஆகியோர் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் மற்றும் வருகிற கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க செய்யப்பட்டு உள்ள முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை
இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-
தமிழக அரசு குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்்து வருகிறது. கோடைகாலத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வினியோகிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவைகளுக்கு என நிறைவேற்றப்படும் திட்டங்களில் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தி வருகிற நீர்ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, அதிக அளவில் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
வாகனங்கள் மூலம் குடிநீர்
புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் வரை அப்பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் அனைத்து பொதுமக்களுக்கும் சரியாக சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் சின்னுசாமி, அரசு வக்கீல் தனசேகரன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.