ஊட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: தாவரவியல் பூங்காவில் 3 மரங்கள் விழுந்தன
ஊட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தாவரவியல் பூங்காவில் 3 மரங்கள் கீழே விழுந்தன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள், தடுப்பணைகள், விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டன. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் மதியம் 1 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மதியம் 2.30 மணியளவில் ஊட்டி நகரில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அதன் தொடக்கத்தில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 1 மணி நேரம் கனமழையாக நீடித்தது.
ஊட்டி சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார், கூட்ஷெட் சாலை, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்றது. அங்கு சில கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்கள் அடைப்புகளை அகற்றி மழைநீரை வெளியேற்றினர். ஊட்டி படகு இல்ல சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கிய மழைநீரில் ஒரு வாகனம் சிக்கியது. பின்னர் வெகுநேர போராட்டத்திற்கு பிறகு அந்த வாகனம் வெள்ளத்தை கடந்தது.
ஊட்டியில் இருந்து காந்தலுக்கு சென்ற அரசு பஸ்கள் தண்ணீரை வேகமாக தள்ளிக்கொண்டு கடந்து சென்றன. மற்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாததால் சிறிது நேரம் அணிவகுத்து நின்றன. பின்னர் மழைநீர் வடிந்தவுடன் அந்த வழியாக வாகன போக்குவரத்து சீரானது. ஊட்டியின் பிரதான கால் வாயான கோடப்பமந்து கால் வாயில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. பல இடங்களில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், பொருட்கள் அடித்து வரப்பட்டதால் குப்பை நகரமாக காட்சி அளித்தது.
அதேபோல் லவ்டேல், கேத்தி, எச்.பி.எப்., தலைகுந்தா, சோலூர் சந்திப்பு, சூட்டிங்மட்டம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தி விட்டு, மழைக்கு ஒதுங்கி நின்றனர். மழை நின்ற பின்னர் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். மழையின் நடுவே சில வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன. கனமழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் ஒரு மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ராஜ்பவனுக்கு செல்லும் சாலையோரத்தில் நின்றிருந்த பழமை வாய்ந்த 3 மரங்கள் மழைக்கு திடீரென வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. பூங்காவில் மழை பெய்த போது, சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றதால் அந்த வழியாக யாரும் நடந்து வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் விழுந்த மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் போலீசாரும் கயிறு கட்டி மரத்துண்டுகள் மற்றும் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் நேற்று ஒரே நாளில் 27 மில்லி மீட்டர் மழை பதிவானது. நடுவட்டம்-2 மி.மீ., கிளன்மார்கன்-8 மி.மீ., குந்தா-4 மி.மீ., அவலாஞ்சி-4 மி.மீ., எமரால்டு-4 மி.மீ. உள்பட நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 51 மி.மீ. மழை பெய்தது. ஊட்டியில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கொளப்பள்ளி பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்துகொண்டு இருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதில் தனியார் மண்டபத்தின் மேற்கூரை காற்றி பறந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து கூடலூர் எம்.எல்.ஏ. திராவிட மணி நேரில் சென்று பார்வையிட்டார்.