தேவாலா அருகே 40 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது; கோவை வாலிபர் காயம்

தேவாலா அருகே 40 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இதில் கோவை வாலிபர் காயம் அடைந்தார்.;

Update: 2018-04-22 22:15 GMT
பந்தலூர்,

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் உதயக்குமார். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுடன் ஒரு காரில் கூடலூர் வழியாக கேரள மாநிலம் கல்பட்டாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேவாலா பகுதியில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் உதயக்குமார் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

அப்போது நீர்மட்டம் என்ற இடத்தில் சென்ற போது சாலையோரம் இருந்த 40 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. மரக்கிளைகள் குத்தியதில் கார் கண்ணாடிகள் உடைந்தன.

இதில் உதயக்குமார் (வயது 28) காயம் அடைந்தார். மேலும் காரில் பயணம் செய்த அவரது நண்பர்கள் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் காயம் அடைந்த உதயக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்