ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சென்னையில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் தலைமை தாங்கினார்.
சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துகுமார், போரூர் நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.ஆனந்தராஜ், மயிலை நாடார் சங்கத்தின் தலைவர் மயிலை பி.சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன் வரவேற்புரையாற்றினார். பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் கண்டன உரையாற்றினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க. மாநில பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா,
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு எஸ்.சுரேஷ், சிம்மப்பேரவை தலைவர் ராவணன் ராமசாமி, த.மா.கா. வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, தென் சென்னை மாவட்ட செயலாளர் யமஹா சுரேஷ், சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசும்போது, “எதிர்கால சந்ததியினர் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அரசு இருந்து வருகிறது. இதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும்” என்றார்.
சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவையின் பொதுச்செயலாளர் ஜெயசங்கர், ஒருங்கிணைப்பாளர் அருணாசலமூர்த்தி உள்பட நாடார் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.