வண்டியூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் நாளை மின்தடை

வண்டியூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. உசிலம்பட்டி, எழுமலை, நாகமலைபுதுக்கோட்டை, உத்தப்பநாயக்கனூர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2018-04-22 21:30 GMT
மதுரை,

வண்டியூர் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:– வண்டியூர், பி.கே.எம்.நகர், மானகிரி, சவுராஷ்டிராபுரம், யாகப்பாநகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான்நகர், பாண்டியன் கோட்டை, பாண்டி கோவில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணாநகர், வீரபாஞ்சான், பூலான்குளம், ஆண்டார் கொட்டாரம், ஒத்த வீடு, இளமனூர், புதூர், எல்.கே.டி.நகர், கல்மேடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று மதுரை வடக்கு மின் செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி, சின்னக்கட்டளை, எழுமலை, அச்சம்பத்து, மொண்டிக்குண்டு உபமின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:–

உசிலம்பட்டி நகர், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, பாப்பாபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிப்புரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, விக்கிரமங்கலம், முதலைக்குளம், நரியம்பட்டி, கொடிக்குளம்.

சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர்.

எழுமலை, சூலபுரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி பகுதிகளிலும், எம்.எல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டி நாயக்கனூர், தி.ராமநாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து.

 நாகமலைபுதுக்கோட்டை, என்.ஜி.ஓ. காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழகுயில்குடி, மேலகுயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூர், கரடிபட்டி, ஆலம்பட்டி.

உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைச்சாமிபுரம் புதூர் மற்றும் அதனைசார்ந்த ஊர்களில் மின்வினியோகம் இருக்காது என்று உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்