திருவள்ளூர் அருகே ரூ.2 கோடி மோசடி; 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே நிதிநிறுவனம் நடத்தி ரூ.1 கோடியே 93 லட்சத்து 43 ஆயிரத்து 507 மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருத்தணியில் திருத்தணி போலீஸ் நிலையம் தெருவை சேர்ந்த சங்கரன் (வயது 45), திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டையை சேர்ந்த மணிலாசங்கரன் (45), செந்தில்குமார் ஆகியோர் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர்.
அவர்கள் மாதம் ரூ.1000 என 3 ஆண்டுகளுக்கு 36 ஆயிரம் செலுத்தினால் முடிவில் ரூ.53 ஆயிரத்து 600 வழங்கப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருவாலங்காடு பழையனூர், மணவூர், சக்கரநல்லூர், நார்த்தவாடா, நல்லாட்டூர், கனகம்மாசத்திரம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் அந்த திட்டத்தில் சேர்ந்து மாதம் தோறும் பணம் செலுத்தி வந்தனர்.
அப்போது அந்த நிதிநிறுவனத்தினர் பொதுமக்களிடம் அத்திட்டத்தில் சேர்ந்ததற்கான பாண்டு பத்திரத்தை கொடுத்தனர். 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பொதுமக்களுக்கு சேரவேண்டிய பணத்தை தருமாறு அணுகியபோது ஏதேதோ காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்தனர்.
இவ்வாறாக அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 18 மாதங்களாக பணம் தராமல் பொதுமக்களை அலைக்கழித்து வந்தனர். அவர்கள் ரூ.1 கோடியே 93 லட்சத்து 43 ஆயிரத்து 507 மோசடி செய்தனர். பணத்தை கேட்க சென்றபோது நிறுவனத்தினர் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்த தனியார் நிதிநிறுவனத்தின் நிர்வாகிகள் சங்கரன், மணிலாசங்கரன், செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடமும் புகார் மனு அளித்தார்கள்.
இதனைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் அனுமந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, சுரேஷ், வீரமணிகண்டன், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் திருத்தணியில் இருந்த சங்கரன், மணிலா சங்கரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்கள். மேலும் தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.