மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காவிரி ஆற்றில் முழங்காலிட்டு போராட்டம் 211 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முக்கொம்பு காவிரி ஆற்றில் அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் முழங்காலிட்டு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து 211 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜீயபுரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்தும், தமிழகத்தின் நீர் வாழ்வாதாரத்தை காத்திடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முக்கொம்பு காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் நேற்று காலை முக்கொம்பு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முக்கொம்பு சுற்றுலா மைய நுழைவு வாயிலில் தடுப்பு கம்பிகள் அமைத்ததோடு, தீவிர விசாரணைக்கு பின்னரே பெரும்பாலான சுற்றுலா பயணிகளை உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துடன் சுற்றுலா மையத்திற்குள் சென்றனர்.
இந்நிலையில் அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜோதிகுமார் தலையில் ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்த முக்கொம்பு காவிரி ஆற்றுக்கு செல்ல வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்கள் முக்கொம்பு நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் காவிரி ஆற்றின் மேலணை பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் அந்த கட்சியை சேர்ந்த சிலர் முழங்காலிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களையும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும் கைது செய்து ஜீயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 109 பெண்கள் உள்பட மொத்தம் 211 பேர் கைது செய்யப்பட்டனர்.