திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.5½ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.5½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-04-21 22:30 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடைமையை சோதனை செய்தபோது, பரிசுப்பொருளில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் சென்னையை சேர்ந்த மொய்தீன் கனி என்பது தெரிய வந்தது.

தங்கம் பறிமுதல்

இதையடுத்து அவர் கடத்தி வந்த 179 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 5 லட்சத்து 63 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்