மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வியாபாரி சாவு

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வியாபாரி சாவு

Update: 2018-04-21 22:15 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 45). வியாபாரி. இவர் நேற்று வெங்கலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் அரும்பாவூர் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தாழைநகர் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் முத்து மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்