பாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
பாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், விவசாயி. இவருடைய மகன் ராஜவேலு (வயது 15). இவன் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் படித்து வந்தான். மாணவன் வீட்டுக்கு வராமல் நண்பர்களுடன் விளையாடி வந்துள்ளான். இதை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவன் ராஜவேலு வீட்டில் விஷம் குடித்தான். தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பெற்றோர் மாலை வீட்டுக்கு வந்த போது ராஜவேலு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது ராஜவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.