பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த வாலிபர் கைது
அரக்கோணத்தில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்,
அரக்கோணம், முருகப்பன் தெருவை சேர்ந்தவர் லதா (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு தபால் அலுவலகம் முன்பாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்போன் பேசியபடி சென்ற வாலிபர் லதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார். உடனே லதா ‘திருடன்’, ‘திருடன்’ என்று சத்தம்போடவே அந்த நபர் செயினை விடுவித்து விட்டு தப்பினார். இது குறித்து லதா அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் செயின் பறிக்க முயன்றவர் அரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சாலமன் (27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.