கூடலூர் அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
கூடலூர் அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரியசோலை பகுதியை சேர்ந்தவர் நபீஷா (வயது 73). அவருடைய உறவினர்கள் சபியா (47), ஜக்ரியா (43). இவர்கள் அனைவரும் ஒரு காரில் கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க சென்றனர். காரை ஜாகீர் உசேன் என்பவர் ஓட்டினார்.
அவர்கள் கோழிக்கோடு சென்று விட்டு கீழ்நாடுகாணி வழியாக காரில் பெரியசோலைக்கு வந்து கொண்டு இருந்தனர். கீழ்நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது.
இதில் காரில் பயணம் செய்த நபீஷா, சபியா, ஜக்ரியா மற்றும் கார் டிரைவர் ஜாகீர் உசேன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான போலீசார் மற்றும் கீழ்நாடுகாணி பகுதி மக்கள், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கிய போலீசார், தீயணைப்பு படையினர் காருக்குள் சிக்கி இருந்த 4 பேரை மீட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.