புதுவை அருகே ஜாமீனில் வந்த மறுநாளே ரவுடி படுகொலை
புதுவையில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிள் மீது மோதி வெட்டித் தள்ளிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம்,
புதுவை அருகே கரிக்கலாம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் என்கிற தாஸ் (வயது34). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுதம் வைத்திருப்பதாக மங்கலம் போலீசாரால் தேவதாஸ் கைது செய்யப்பட்டார். காலாப்பட்டு சிறையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வந்தார்.
இதற்கிடையே ஜாமீன் பெற தேவதாஸ் முயன்று வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரால் ஊர் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு கோர்ட்டில் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர்.
ஆனாலும் தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. நேற்று முன்தினம் தான் தேவதாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள பாரதியார் கிராம வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் தனது கூட்டாளி ஜெயசூர்யா என்பவருடன் தேவதாஸ் சென்றார். அப்போது அவரை 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்தது. திடீரென்று அவர்கள் தேவதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதினார்கள்.
இதை எதிர்பாராத நிலையில் தேவதாஸ், ஜெயசூர்யா ஆகிய இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
உடனே அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கீழே விழுந்து கிடந்த தேவதாசை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். இதனை கண்டதும் ஜெயசூர்யா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தேவதாஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தேவதாஸ் ஜாமீனில் வெளியே வர முயற்சிப்பதை அறிந்த போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அதற்கு முன் அவசர அவசரமாக தேவதாஸ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் மறுநாளே அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரவுடிகளுக்குள் இருந்த மோதல் காரணமாக பழிக்குப்பழி வாங்க இந்த கொலை நடந்ததா? வேறு காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் தேவதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவதாசை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேவதாசுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.