டிரைவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி லாரிகளை கடத்திய பெண் உள்பட 10 பேர் கைது

டிரைவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி லாரிகளை கடத்திய பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-20 23:55 GMT
தானே,

நந்துர்பர், புல்தானா, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் டிரைவர்களை மிரட்டி லாரிகளை கடத்தி வந்துள்ளது. இந்த லாரிகள் அனைத்தும் பிவண்டி பகுதியில் உள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பிவண்டியில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தனர்.

அப்போது, அங்குள்ள மைதானத்தில் 16 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த லாரிகள் அனைத்தும் கடத்தப்பட்டவை என்பதும், நம்பர் பிளேட்டை மாற்றி இயக்கப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த லாரிகள் அனைத்தையும் கைப்பற்றினர்.

டிரைவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அந்த லாரிகளை கடத்தியவர்கள் தினேஷ், சுதாகர், தேஷ்முக், ராகேஷ் கான், முகமது கான், உமாசங்கர் கவுதம், அப்துல் சவுத்ரி, சாகித் சித்திக், சகீல் சேக் மற்றும் பெண் நசிமுன்னிசா கான் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிவண்டியில் இருந்த அவர்கள் அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும் செய்திகள்