தஞ்சை ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் சேர 25-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் - கலெக்டர்
ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் சேர 25-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் சேர வருகிற 25-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப் படுகிறது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய குழந்தைகள் நலக்குழும தஞ்சை மாவட்ட கிளையின் கீழ் 50 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் ஆதரவற்றோர் மாணவர் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை, குழந்தைகள் நலம் பேணுதல், ஓவியம் மற்றும் கைவினை பயிற்சி, இசை, நடன பயிற்சி, ஆங்கிலம் மொழி பயிற்சி, கணினி பயிற்சி, தற்காப்பு பயிற்சி, சிலம்பம், கூடுதல் கல்வி பயிற்சி மற்றும் தனித்திறமை மேம்பாட்டு பயிற்சி, கல்வி சுற்றுலா ஆகிய அனைத்தும் தனித்தனி சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இல்லத்திற்கு அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில வசதி உள்ளது.
ஆதரவற்ற மாணவர்கள், வறுமையில் உள்ள மாணவர்கள், தாய், தந்தை இல்லாத மாணவர்கள் முற்றிலும் இலவசமாக அனைத்து வசதிகளுடன் தங்கி கல்வி கற்கலாம். 2018-19-ம் ஆண்டிற்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம் வருகிற 25-ந் தேதி முதல் அடுத்தமாதம்(மே) 20-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதரவற்றோர் மாணவர்கள் இல்லத்தில் வழங்கப்படும்.குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று, மருத்துவச்சான்று, ஆதரவற்றோர் சான்று, தற்போதைய இருப்பிடச்சான்று ஆகியவற்றில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் மாணவர்களது 6 வண்ணப்புகைப்படங் களையும் சேர்த்து இந்திய குழந்தைகள் நலக் குழுமம், 43,சி. மருத்துவ கல்லூரி சாலை, மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்-613009 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.