ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கின
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி பூக்கள் பூக்க தொடங்கியது.
ஊட்டி,
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் (மே) 18, 19 மற்றும் 20-ந் தேதிகளில் 122-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்காவின் நர்சரியில் மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது. இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, பெரணி இல்ல பகுதி, இலை பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பாத்திகள் அமைக்கப்பட்டும், நடைபாதையோரங்களிலும் மலர் நாற்றுகள் நடப்பட்டன.
கோடை சீசனையொட்டி தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பூங்கா நுழைவுவாயிலில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் நிழற்குடைகள், நடைபாதையோரங்களில் உள்ள தடுப்பு கம்பிகள், இந்திய வரைபடம், மலர் மாடங்களில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு, அதனை சுற்றி கயிறு கட்டப்பட்டு உள்ளது. அதனுள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கோடை சீசனுக்காக பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் பெரணி இல்லம் அருகே 16 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் தற்போது பூக்க தொடங்கி உள்ளன. மேரிகோல்டு, சால்வியா போன்ற மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கி விட்டதால், பூங்காவுக்கு தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. இது தவிர ஜெரோனியம், சைக்லமன், பென்ஸ்டிமன், சுவீட் லில்லியம், பேன்சி, பெட்டுனியா உள்பட மொத்தம் 230 வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து, அவர்களது கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது.
16 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடங்கள் மற்றும் புல்வெளிகளில் பல்வேறு அலங்காரங்களுடன் அடுக்கி வைக்கப்பட உள்ளது. தற்போது ஊட்டியில் வெயில் அடித்து வருவதால் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி அதனை பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூக்கள் பூத்து உள்ளதால் கோடை சீசன் களை கட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.