கொள்ளிடம் அருகே ரூ.12 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்
கொள்ளிடம் அருகே ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே தில்லைமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பாரதி எம்.எல்.ஏ., மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி, சீர்காழி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புஷ்பலதா வரவேற்றார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர், மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தாழந்தோண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வத்திடம் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஜெயராமன், ஒன்றிய ஆணையர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) தமிழ்க்கொடி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், நற்குணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் குமார் நன்றி கூறினார். இதேபோல் கொள்ளிடம் அருகே காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ரூ.12 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.