சிலிண்டர் இணைப்பை இணையதளம் மூலம் மாற்றம் செய்யலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் இணைப்பை இணையதளம் மூலம் மாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் இணைப்பை இணையதளம் மூலம் மாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
சிலிண்டர் இணைப்பு
பொதுமக்களுக்கு திருப்திகரமாக சேவை செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசு புதிய ஏற்பாட்டை செய்து உள்ளது. அதன்படி, எந்த ஒரு சிலிண்டர் இணைப்பை பெற்ற வாடிக்கையாளரும், தங்களின் சிலிண்டர் இணைப்பை எந்த ஒரு ஆயில் நிறுவனத்தில் இருந்தும், எந்த ஒரு சிலிண்டர் முகவரிடம் இருந்தும், எந்த நேரத்திலும் இணையதளம் மூலம் தாங்கள் விரும்பும் முகவருக்கு சிலிண்டர் இணைப்பை மாற்றம் செய்து கொள்ளும் வசதியை தமிழக அரசு வழங்கி உள்ளது.
இணையதளம்
எனவே சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் www.mylpg.in என்ற இணையதள முகவரி மூலம் தாங்கள் விரும்பும் முகவருக்கு சிலிண்டர் இணைப்பினை மாற்றம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.