மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை

மூணாறு பகுதியில் ஒற்றை யானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது.

Update: 2018-04-19 22:41 GMT
மூணாறு,

மூணாறு நகரில் இரவு நேரம் குடியிருப்பு பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுபன்றிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மூணாறு-உடுமலை சாலை பெரியாறை பகுதியில் காட்டுயானை ஒன்று சுற்றி திரிகிறது. இந்த காட்டுயானை இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றது. எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்