ஒரே நாளில் தொடர் திருட்டு சம்பவங்கள் : 92½ பவுன் நகை கொள்ளை
குடியாத்தத்தில் ஒரே நாளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;
குடியாத்தம்,
குடியாத்தம் நகரை ஒட்டியபடி ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லை உள்ளது. இப்பகுதியில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் நள்ளிரவில் வெளியூர் செல்லும் ரெயில்கள் குடியாத்தம் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதனால் இரவிலும் பொதுமக்கள் நடமாட்டம் நகரில் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பல திருட்டு சம்பவங்கள் குடியாத்தம் பகுதியில் நடைபெற்றுள்ளது. சில தினங்களாக ஆந்திர மாநிலத்தின் வழியாக வடமாநில கொள்ளையர்கள் வேலூர் மாவட்டத்தில் ஊடுருவி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் அவர்கள் பகலில் வியாபாரிகள் போல் பூட்டிய வீடுகளை நோட்டமிடுவதும், இரவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் தகவல் பரவி வருகிறது.
குடியாத்தம் போடிப்பேட்டை தண்ணீர்தொட்டி அருகே உள்ள வசந்தம்நகரை சேர்ந்தவர் லோகநாதன், நகை தொழிலாளி. நேற்றுமுன்தினம் வழக்கம்போல் லோகநாதன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
குடியாத்தம் பிச்சனூர் நரிமுருகப்பமுதலி தெருவை சேர்ந்தவர் முகேஷ். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலையில் அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது முகேஷ் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 2½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருட்டு போயிருந்தது.
குடியாத்தம் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜாவித்அகமது. இவர் தரணம்பேட்டை பஜாரில் வெங்காய மண்டி வைத்துள்ளார். நள்ளிரவில் இவரது கடைக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் கடப்பாரையால் மேஜை டிராயரை உடைத்து, அதிலிருந்து ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதேபோல் போடிப்பேட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் 2 பேர் ஒரு வீட்டை நோட்டமிட்டனர். வீட்டின் உரிமையாளர் அவர்களை பார்த்து சத்தம் போட்டதும் 2 பேரும் ஓடி விட்டனர்.
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்கார தெருவை சேர்ந்தவர் திலகவதி. இவரது கணவர் ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டார். திலகவதி தனது இளைய மகன் பாண்டியன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பாண்டியன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு சென்று விட்டார். இந்த வீட்டில் திலகவதி மட்டும் வசித்து வந்தார். கடந்த 17-ந் தேதி கண் பரிசோதனைக்காக திலகவதி வேலூர் சென்றுள்ளார். நேற்று காலையில் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக திலகவதி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 75 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போனதாக கூறப்படுகிறது. திலகவதியின் மகன் பாண்டியன் வந்தபின்னர்தான் திருட்டு போன பொருட்களின் முழு விவரம் தெரியவரும் என தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் பீதி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மட்டும் சுமார் 92½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டல் அதிபர் வீட்டில் 55 பவுன் நகையும், ரூ.5 லட்சமும், மேல்ஆலத்தூரில் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகையும் திருட்டு போயின என்பது குறிப்பிடத்தக்கது.