லாரி உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
நாமகிரிப்பேட்டை அருகே லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு அருகே உள்ள நத்துக்குழிப்பட்டியை சேர்ந்த சின்னுசாமி மகன் ராஜேந்திரன் (வயது 40). லாரி உரிமையாளர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி, நாமகிரிப்பேட்டை பஸ்நிறுத்தம் அருகே இருந்து மாயமானார்.
இதுகுறித்து அவரது உறவினர் குப்பன் அளித்த புகாரின் பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜேந்திரன் நாமகிரிப்பேட்டையில் இருந்து சிங்களாந்தபுரம் செல்லும் வழியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
சிங்களாந்தபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி மகன் சுரேஷ் (26), நாமகிரிப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ்குமார் (26) ஆகியோர் ராஜேந்திரனை கொலை செய்து விட்டு, அவரது லாரியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ், சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் , சுரேஷ்குமார் ஆகிய 2 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு அதனை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். மேலும் இருவருக்கும் தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து 2 பேரையும் கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.