ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
வங்கி முற்றுகையிட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனா்.
விருதுநகர்,
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முற்றுகையிட்ட 4 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.