நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அறிக்கை
நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி,
நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது :
நெல்லை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி கழகங்கள் அளவில் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், நகரப்பகுதியில் வார்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பூத் அளவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு வருகிற 19.04.2018 முதல் 03.05.2018 வரை மாவட்ட கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பம் வழங்கும் நபர்களுக்கு வருகிற மே மாதம் 5–ம் தேதி மற்றும் 6–ம் தேதிகளில் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நேர்காணல் நடைபெறயிருக்கிறது. ஆகையால் விண்ணப்பத்தை மே 3–ம் தேதிக்குள் வழங்கிடவும் மே மாதம் 5, 6–ம் தேதிகளில் நேர்காணலில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.