அரசியாகப் போகும் குட்டி இளவரசி!

இங்கிலாந்தின் குட்டி இளவரசி சார்லோட் விரைவில் அரசியாக அரியணையை அலங்கரிக்கப் போகிறார்.;

Update: 2018-04-20 22:15 GMT
ங்கிலாந்து இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதிக்கு, ஜார்ஜ், சார்லோட் என இரு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது கேட் மூன்றாவதாக கர்ப்பமுற்றிருக்கிறார்.

குழந்தை பிறக்கும் தேதி நெருங்கிவிட்ட நிலையில், பிறக்கப்போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனத் தெரியவில்லை.

ஆனால், மூன்றாவது குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அக்குழந்தை பிறக்கும்போது சார்லோட்டுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

இங்கிலாந்தின் 2013 கிரவுன் ஆக்ட்படி, இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்த சார்லோட், இங்கிலாந்து அரச குடும்பத்தின் அரசியாக அரியணையில் ஏறுவார். ஒருவேளை இளவரசர் ஜார்ஜ் ஒரு பெண் குழந்தையாக இருந்திருந்தால், அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

ஆனால், ஜார்ஜுக்கு முன்னர், அவரது தாத்தா சார்லஸ், தந்தை வில்லியம் ஆகிய இருவரும் அரியணை ஏறுவதற்கு வரிசையில் இருப்பதால், அவர்களுக்குப் பின்னர்தான் இவருக்கு கிரீடம் சூட்டப்படும்.

எனவே, பெண் குழந்தைகளின் வரிசையில் இளவரசி சார்லோட் முதலில் இருக்கிறார். 1701-ம் ஆண்டு அரச குடும்பச் சட்டப்படி, எப்போதும் சகோதரர்கள் தங்களுடைய சகோதரி களுக்கு முன்பாக அரச பொறுப்பு ஏற்பார்கள்.

ஆனால் அந்தச் சட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. எனவேதான், குட்டி இளவரசி சார்லோட்டுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. 

மேலும் செய்திகள்