திக் திக் நகரம்..!

வியட்நாம் நாட்டின் ஹனாய் பகுதியில் இருக்கும் சாலைகள் எப்போதும் பிசியாகவே இருக்கின்றன. காரணம்... அந்த பகுதிகளில் இருக்கும் சாலைகள் திடீர் திடீரென மாற்றம் பெருகின்றன.

Update: 2018-04-19 22:00 GMT
சில நிமிடங்கள் கார்-மோட்டார் சைக்கிள்கள் செல்லும் சாலைகளாகவும், சில நிமிடங்கள் ஓட்டல்கள்-கடைகள் நிறைந்திருக்கும் சாலைகளாகவும், சில நிமிடங்களுக்கு ரெயில் பயணிக்கும் சாலைகளாகவும் மாறிவிடுகின்றன. அதனால் ஹனாய் பகுதியை ‘உருமாறும் நகரம்’ என்று அழைக்கிறார்கள்.

ஹனாய் நகரம் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த நகரம். அதனால்தான் சின்ன சின்ன சந்துகள் கூட, ஹனாய் நகரின் மிக முக்கிய சாலைகளாக மாறிவிடுகின்றன. ஹனாய் நகரில் இருக்கும் சின்னச்சிறு சந்து பொந்துகளை எல்லாம், நகரின் பிரதான சாலைகளாகவும், அதையே ரெயில்கள் பயணிக்கும் தண்டவாள பாதைகளாகவும் மாற்றியிருக்கிறார்கள். இதற்கிடையில் சாலைகளில் கடை வியாபாரங்களும் அமோகமாக நடக்கிறது. மக்கள் நடமாடும் பகுதிகள் என்பதால் ரெயில் சேவை மிகக் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படுகிறது. அதிகபட்சம் 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் ரெயில்கள் அசைந்தாடி செல்லுமாம். அந்த சமயங்களில் மட்டும் சாலைகளில் விரிக்கப்பட்டிருக்கும் சந்தை கடைகளும், ஓட்டல் இருக்கைகளும் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்படுகின்றன. ரெயில்கள் கடந்ததும், கடைவீதிகள் பழைய நிலையை எட்டிவிடுமாம். இதை பார்த்து ரசிப்பதற்காகவும், அந்த திக் திக் நிமிடங்களை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஹனாய் நகருக்கு படையெடுக்கிறார்கள். 

மேலும் செய்திகள்