தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மராட்டிய கிராமங்களில் அனைவருக்கும் கழிவறைகள் கட்டப்பட்டுவிட்டன
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மராட்டிய கிராமங்களில் அனைவருக்கும் கழிவறைகள் கட்டப்பட்டுவிட்டதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டிய கிராமப்புறங்களில் 55 சதவீதம் பேர் கழிவறை வசதி இன்றி திறந்தவெளியில் மலம் கழித்து வருவதாக கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கை கூறியது. இந்தநிலையில் மும்பையில் நிருபர்களை சந்தித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கடந்த 3½ வருட ஆட்சியில் மராட்டிய கிராம புறங்களில் கழிவறை இன்றி தவித்த 55 சதவீதம் பேருக்கு கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் 34 மாவட்டங்கள், 351 தாலுகாக்கள் மற்றும் 21 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 40 ஆயிரத்து 500 கிராமங்களில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி 2016-2017-ம் ஆண்டில் 19 லட்சத்து 16 ஆயிரம் கழிவறைகளும், 2017-2018-ம் ஆண்டில் 22 லட்சத்து 51 ஆயிரம் கழிவறைகளும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 81 ஆயிரம் பொதுகழிவறைகளும் அடங்கும். இதற்காக மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பங்களிப்பில் ரூ.4 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் அடுத்தகட்ட பணியாக கழிவறை பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் ஊக்குவிக்க இருக்கிறோம். இதற்காக சிறுவர்-சிறுமிகள் அடங்கிய ‘காலை வணக்க படை’ கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த படையில் சிறுவர்-சிறுமிகள் விசில்கள் மற்றும் பூக்களுடன் கிராமப்புறங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களிடம் பிரசாரம் மேற்கொள்வார்கள்.
அதேநேரத்தில் இந்த பணிகளின்போது மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் வெறும் 3½ ஆண்டுகளில் இத்தனை கழிவறைகளை கட்டி முடித்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.