தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற வைப்பது தான் எங்கள் முதல் நோக்கம் பரமேஸ்வர் பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற வைப்பது தான் எங்களின் முதல் நோக்கம் என்றும், முதல்-மந்திரி யார் என்பது குறித்து பிறகு முடிவு செய்வோம் என்றும் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் முழு மெஜாரிட்டி பெற 113 தொகுதிகளில் காங்கிரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் முதல் நோக்கம். அதன் பிறகே முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்வோம். கள ஆய்வின் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து உள்ளோம். சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வெற்றி பெறுவது உறுதி.
டிக்கெட் கிடைக்காதவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த குழப்பத்திற்கு தீர்வு காண்போம். இது காங்கிரஸ் வெற்றியை பாதிக்காது. 2 தொகுதிகளில் போட்டியிட சித்தராமையா ஆர்வம் காட்டவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிட்டால் கட்சியின் வெற்றியில் நம்பிக்கை குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் செயல் தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் உள்ளிட்ட நிர்வாகிகள் சித்தராமையாவை நேரில் சந்தித்து, பாதாமி தொகுதியிலும் போட்டியிடுமாறு வலியுறுத்தினர். கனிம சுரங்க முறைகேடு புகாருக்கு உள்ளாகி இருக்கும் ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் கட்சியின் வெற்றியை பாதிக்காது.
சட்டம், மக்களின் குரல் வெவ்வேறானது. ஆனந்த்சிங் மற்றும் நாகேந்திரா ஆகியோரை அவர்களின் தொகுதி மக்கள் தங்களின் தலைவர்களாக கருதுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் அரசியல் பலம் உள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் எடியூரப்பா. அவர் தான் கர்நாடக பா.ஜனதா தலைவராக உள்ளார். மைசூரு பகுதியை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, சீனிவாச பிரசாத் ஆகியோர் எங்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது. அதனால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை.
பெங்களூரு சாந்திநகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது அரசியல் வியூகம். அந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பது குறித்து எங்கள் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். என்.ஏ.ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் ஈடுபட்ட சம்பவத்தில் அவரது பெயரை சிலர் இழுத்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் 3 கட்ட பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி அவர் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன் பிறகு மே மாதம் 3-ந் தேதி மற்றும் 4-ந் தேதி பிரசாரம் செய்கிறார். அதைத்தொடர்ந்து 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ராகுல் காந்தி கர்நாடகத்தில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
கதக், ஹாவேரி, உத்தரகன்னடா, மடிகேரி ஆகிய மாவட்டங்களில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்வார். கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய வருமாறு சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் இதுபற்றி முடிவு செய்வார். பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.